குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா? கூடாதா?

Default Image

பல்வேறு சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட சத்துக்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் கொய்யா பழம் தான். கொய்யா பழத்தில் இருக்கும் ஒரு வகையான சுவை குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானது.

இதில் என்னவென்றால் சின்ன குழந்தைகள் கொய்யா பழம் சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு . பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து திட உணவுகள் கொடுப்பது வழக்கம்.

அந்த வயதில் தாய்ப்பால் மட்டும் போதுமான குறிப்புள்ள ஊட்டச்சத்துகளைத் தந்து வளர்ச்சிக்கு உதவ முடியாது என்பதால் திட உணவுகள் சேர்த்து கொடுக்கப்படுகின்ற. இந்த காலகட்டத்தில் பழங்கள் கொடுப்பது பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் இவற்றின் சுவை மற்றும் இவற்றில் பொதிந்திருக்கும் ஊட்டச்சத்துகள்.

கொய்யாபழத்தில் உள்ள விதைகள் என்ன  செய்கிறது என்றால் செரிமான பாதிப்பை உண்டாக்கும் என்றும். குழந்தைகள் கொய்யா சாப்பிடுவதால் பாதுகாப்பான செயல் இல்லை என்றும் தவறான கணிப்பு நம் மனதில்இருக்கிறது. இருப்பினும், கொய்யாவை குழந்தைகள் உட்கொள்வதற்கு வேறு வழிகள் உள்ளன.

கொய்யாபழத்தில் ஊட்டச்சத்துக்களின்  மதிப்புகளை மனதில் கொண்டு இந்த செயல்முறைகளை பின்பற்றி குழந்தைகளுக்கு இந்த பழத்தைக் சாப்பிட கொடுக்கலாம் . இப்போது கொய்யா உட்கொள்வதால் குழந்தைகளுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.

மேலும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, கொய்யா பழத்தில் வைட்டமின் சி சத்து நிறையஇருக்கிறது. குழந்தைகளில் நோயெதிர்ப்பு செயல்பாடு, வளர்ச்சி மற்றும் உயிரணு மீளுருவாக்கம் செய்வது போன்றவற்றில் வைட்டமின் சி யின் வேலை முக்கியம். ஒரு கொய்யாவில் ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்