பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் மிகவும் முக்கியமான ஒன்று. மேலும் இந்த நாட்களில் பெண்கள் அனைவருமே சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் துணிகளை உபயோகித்தார்கள். ஆனால் தற்பொழுது அதிக அளவில் நாப்கின்களை தான் பெண்கள் உபயோகிக்கிறார்கள்.
இதனால் சிலருக்கு அலர்ஜி மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. மேலும், இதன் காரணமாக கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களும் ஏற்படுகிறது. எனவே தற்போது சானிட்டரி நாப்கினுக்கு பதிலாக மாற்று உபயோகமாக பல பொருட்கள் வந்துள்ளது. ஆனால் அவை நாம் உபயோகிப்பதும் இல்லை. காரணம் தயக்கம் தான்.
இன்றும் நாம் உருளை வடிவில் உள்ள நாப்கினுக்கு மாற்றான டாம்பன் குறித்து அறிந்து கொள்ளலாம். இந்த டாம்பன் உபயோகிப்பது எப்படி? அதை உபயோகிக்கலாமா? உபயோகிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
டாம்பன் என்பது நாப்கின் போன்றது தான். ஆனால், நாப்கின் போல நமக்கு எந்த ஒரு அழற்சி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தாத உருளை வடிவ பஞ்சு. பெண்ணுறுப்புக்குள் சொருகும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த டாம்பன் மாதவிடாய் காலத்தில் வெளியாகும் இரத்த போக்கை முழுவதுமாக உறிஞ்சி வைத்துக் கொள்வதற்கு உதவும். இது பருத்தி, ரேயான் அல்லது இவை இரண்டையும் கலந்து தயாரிக்கின்றனர். எனவே, பயமின்றி உபயோகிக்கலாம்.
டாம்பன் பயன்படுத்துவதால் நாப்கின் பயன்படுத்தும் பொழுது ஏற்படக்கூடிய அழற்சி மற்றும் ஒவ்வாமை வராமல் தடுக்கிறது. மேலும் இந்த டாம்பன் பஞ்சு உருளை போன்று இருப்பதால், இவை நமது பெண்ணுறுப்பில் இருந்தாலும் எந்த ஒரு அசௌகரியம் அற்ற நிலையையும் ஏற்படுத்தாது. நாப்கின் உபயோகிக்கும் பொழுது ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் வெளியேறும் அபாயம் உள்ளது.
ஆனால் இந்த டாம்பன் பயன்படுத்தும் பொழுது ரத்தப்போக்கு சில சமயங்களில் அதிகமாக இருந்தாலும் அதனை இது முழுமையாக உறிஞ்சி கொள்ளும். எனவே வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது அதிகப்படியான ரத்தப் போக்கு குறித்து கவலைப்பட தேவையில்லை.
மேலும் நாம் மாதவிடாய் நேரத்தில் செய்ய முடியாத பல வேலைகளை டாம்பன் உபயோகிக்கும் பொழுது செய்ய முடியும். உதாரணமாக நாம் விரும்பிய ஆடைகளை அணியலாம் நீச்சல் குளத்தில் குளித்தல் போன்ற செய்ய முடியாத சில வேலைகளையும் செய்யலாம்.
அதில் கொடுக்கப்பட்டிருக்கும் நூலை இழுத்தால் வெளியே வந்துவிடும் இதற்காக நாம் பெரிதாக கஷ்டப்பட தேவையில்லை, இதனால் கன்னி சவ்வு கிழிந்து விடும் என்று கூறுவது முற்றிலும் தவறு. இது சிறிய மெழுகுவர்த்தி போன்று தான் இருக்கும். எனவே பயமின்றி உபயோகிக்கலாம்.
டாம்பன் உபயோகிப்பதால் பெரும்பாலும் நன்மைகள் தான் உள்ளது. இருப்பினும் சிலருக்கு குறைவான ரத்தப்போக்கு அல்லது திட்டுகளுடன் கூடிய ரத்தம் வெளியேறுதல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் டாம்பன் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.
மேலும் நாப்கின் போல அலர்ஜி ஒவ்வாமை ஏற்படாது எனக் கூறினாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்த டாம்பனை மாற்றாத பட்சத்தில் அப்பொழுது அழற்சி மற்றும் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, எனவே பாதுகாப்பாக உபயோகிப்பது நல்லது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…