பிரெட்டை வைத்து இது கூட செய்யலாமா….? அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே….!!!
பிரெட் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது மென்மையானது. எனவே குழந்தைகளுக்கு இந்த பிரெட்டை அதிகமாக கொடுப்பது உண்டு. பிரெட்டை வைத்து நாம் பல வகையான உணவு பொருட்களை செய்து சாப்பிடுவதுண்டு. ஆனால் பிரெட்டை வைத்து பஜ்ஜி கூட செய்யலாமாம். இப்பொது ப்ரெட் பஜ்ஜி செய்வது எப்படி என்று பாப்போம்.
தேவையான பொருட்கள் :
- ப்ரெட் – 15 துண்டுகள்
- கடலை மாவு – 2 கப்
- அரிசி மாவு – 1/2 கப்
- மிளகாய் போடி 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
செய்முறை :
பிரெட் பஜ்ஜி செய்வதற்கு முதலில் காலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
பிறகு பிரெட்டை 2 துண்டுகளாக முக்கோண வடிவில் வெட்டி வைக்க வேண்டும். அதன் பின் பிரெட்டை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது நமக்கு தேவையான பிரெட் பஜ்ஜி ரெடி.