“அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா?” டிரம்பின் பதிவால் மக்களிடையே பரபரப்பு!

Default Image

“அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா?” என அதிபர் டிரம்ப் கேள்வியெழுப்பிய நிலையில், அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. அங்கு, கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்கள் முறையாக வாக்களிக்கும் வரை அதிபர் தேர்தலை தாமதப்படுத்தலாமா? என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, யுனிவர்சல் மெயில் மூலம் வாக்களிப்பு நடந்தால், 2020 வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான தேர்தலாக இது இருக்ககூடும். இது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடமாக இருக்குமென அந்த பதிவில் கூறினார்.

மேலும், மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை தேர்தல்கள் தாமதப்படுத்தலாமா? என டிரம்ப் கேள்வி எழுப்பினார். அதிபர் ட்ரம்பின் இந்த பதிவால், அமெரிக்க மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதிபர் டிரம்ப், இந்தாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே குற்றம் சாற்றியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 02012025
Karnataka
Pongal bonus for government employees
neem leaf (1)
Jasprit Bumrah and rohit
Arjuna Award 2024
KhelRatna Award