காற்று மூலம் கொரோனா நோய் தொற்று பரவுமா? ஆதாரங்களுடன் விளக்கும் விஞ்ஞானிகள்!

கொரோனா வைரஸின் தாக்கம் காற்று மூலமாக பரவும் எனவும், அதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும், இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் 1.15 கோடி மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த கொரோனா வைரஸ் தொற்று, மூக்கு அல்லது வாய் மூலம் சிறிய துளிகளால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. அதாவது, மக்கள் தும்மும்போது, இருமும்போது அல்லது பேசும்போது இந்த தொற்று பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பதற்காக, முகக்கவசம் அணிவது, சமூகஇடைவெளி பின்பற்றுவது, போன்றபல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த கொரோனா தொற்று, காற்றின் சிறிய துகள்களில் உள்ள கொரோனா வைரஸ், மக்களை பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், காற்று மூலம் கொரோனா பரவும் ஆதாரங்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து 32 நாடுகளில் 239 விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வில் காற்றில் சிறிய துகள்கள் மூலம் மக்களை கொரோனா பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டும் ஆதாரங்களை கோடிட்டுக் காட்டியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டது.
மேலும், காற்று மூலம் கொரோனா பரவுகிறது என கூறியதற்கு உலக சுகாதார அமைப்பு உடனடியாக பதிலளிக்கவில்லை எனவும் அந்த செய்தி தொகுப்பில் தெரிவித்தது. கொரோனா அறிகுறியுடன் உள்ள நோயாளி ஒருவர் துமிய பிறகு, வரும் நீர்த்துளிகள், காற்று மூலம் பரவுகிறது. இதனால் கொரோனா வைரஸ் காற்று வழியாகப் பரவுகிறது என தெரிவித்து வருகின்றன.
அந்த காற்றை உள்ளிழுக்கும்போது மக்களை பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று கற்று மூலம் பரவுவதற்கான சான்றுகள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில், கொரோனா பரவுதலை முடிந்தவரை நாங்கள் கருதுகிறோம். ஆனால் தெளிவான ஆதாரங்களால் நிச்சயமாக ஆதரிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்ப முன்னணி டாக்டர் பெனடெட்டா அலெக்ரான்ஸி தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025