போகோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் பலி.!
கேமரூன், நைஜீரியா, சாட், மாலி, நைகர் ஆகிய ஆப்ரிரிக்க நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்பான போகோஹரம் மேற்கண்ட நாடுகளை ஒன்றினைத்து ஆட்சி செய்ய அவ்வப்போது தாக்குதல்களைநடத்தி வருகிறது.
இந்நிலையில், அண்மையில் கேமரூன் நாட்டின் அம்ஜிடி நகரில் பொதுமக்கள் வழிபாட்டு தளத்தில் வழிபாடு முடிந்து வீடு திரும்புகையில் இரண்டு தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் அந்த இரண்டு தீவிரவாதிகள் உட்பட பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர கேமரூன் நாட்டின் சிஹஹி பகுதியில் 2 ராணுவ வீரர்களும் போகோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.