பாகிஸ்தான் கிராமப்புறத்தில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகத்தை எடுத்துச் செல்லும் ஒட்டகம்!

Default Image

பாகிஸ்தானில் உள்ள கிராமப்பகுதிகளில் குழந்தைகளுக்கு ஒட்டகம் ஒன்று புத்தகங்களை எடுத்துச் சென்று கொடுத்து வருகிறதாம். 

கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் அதிக அளவில் பரவி வரும் நிலையில், பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், ஒட்டகம் ஒன்று பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எடுத்துச் செல்கிறதாம். அந்த ஒட்டகத்தின் பெயர் ரோஷன். வாகனங்கள் செல்லமுடியாத குறுகலான கிராமங்களில் வசிக்கக்கூடிய பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ரோஷன் ஒட்டகம் புத்தகங்களை எடுத்துச் சென்று கொடுத்து விடுகிறதாம். குழந்தைகளும் ஒட்டகத்தை பார்த்து ஒட்டகத்திலிருந்து புத்தகங்களை வாங்குவதற்காக மிக ஆர்வமாக சென்று வாங்குகிறார்கள்.

ஒட்டகத்தை வைத்து நூலகம் ஒன்றை பாகிஸ்தானிலுள்ள பள்ளி முதல்வர் ரஹீம் என்பவர் தனது சகோதரியுடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கியுள்ளார். அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருப்பதால் தொலைதூர ஊரை சுற்றியுளள குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு செய்துள்ளாராம். இந்த ஒட்டகம் சுற்றி உள்ள நான்கு வெவ்வேறு கிராமங்களுக்கு வாரம் மூன்று முறை சுமந்து சென்று கொண்டே கொடுக்குமாம்.

இது குறித்து அந்த ரோஷன் எனும் பெயருடைய ஒட்டகத்தின் உரிமையாளர் முரளி என்பவர் கூறுகையில், தன்னிடம் பள்ளி முதல்வர் இந்த திட்டத்தை பற்றி முதலில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது தான் ஆச்சரியம் அடைந்ததாகவும், ஆனால் ஒட்டகம் தான் விவேகமாகவும் பத்திரமாகவும் சென்று குழந்தைகளுக்கு புத்தகத்தைக் கொடுக்க முறையான வழி என அவர்கள் நினைத்ததாகவும் தன்னுடைய ஒட்டகம் புத்தகங்களை குழந்தைகளுக்கு சென்று கொடுக்கும் பொழுது அதை பார்க்கக்கூடிய குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்