வரலாற்றில் இன்று (01-01-2020) ! நாம் பின்பற்றும் கிரிகோரியன் நாள்காட்டியின் சிறப்புகள்…
- ரோம பேரரசர் ஜூலியர் சீசர் உருவாக்கிய ஜூலியன் நாள்காட்டியை தழுவி இந்த கிரிகோரியன் நாள்காட்டி உருவாக்கப்பட்டது.
- கி.மு 45காலகட்டத்தில் இத்தாலிய திருத்தந்தை பதிமூன்றாம் கிரிகோரியன் இந்த நாள்காட்டியை வெளியிட்டதால் கிரிகோரியன் நாள்காட்டி என பெயர் வந்தது.
தற்போது உலகம் முழுவதும் பொது நாள்காட்டியாக கருதப்படுவது நாம் பயன்படுத்தும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை கொண்ட கிரிகோரியன் காலண்டர்தான். இந்த நாள்காட்டியானது ரோம பேரரசு ஜூலியர் சீசர் உருவாக்கிய ஜூலியன் காலண்டரை தழுவி இந்த நாள்காட்டி உருவாக்கப்பட்டது.
கி.மு 45 ஆண்டு காலட்டத்தில் இத்தாலியர் உருவாக்கிய இந்த காலண்டரை அப்போதைய திருத்தந்தை 13ஆம் கிரிகோரியன் அவர்கள் வெளியிட்டதால், இந்த நாள்காட்டிக்கு கிரிகோரியன் நாள் காட்டி என பெயர் வந்து. இந்த நாள்காட்டியில் முதலில் 10 மாதங்கள் மட்டுமே கணக்கிடபட்டிருந்தன.
அதன் பிறகு தான் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள் கணக்கிடப்பட்டன. இந்த நாள்காட்டியை 1582ஆம் ஆண்டு முதல் இத்தாலி நாடு பின்பற்றி வருகிறது. அதன் பிறகு 1752 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் இந்த நாள்காட்டியை பின்பற்றினார்கள். இங்கிலாந்து, இந்தியாவில் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது இந்த கிரிகோரிய நாள்காட்டியும் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டன.
கடைசியாக 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தான் கிரேக்கம் இந்த கிரிகோரிய நாள்காட்டியை பழக்கத்தில் கொண்டுவந்தது.