இந்தியாவை மலேசியா, மியான்மர் மற்றும் சிங்கப்பூருடன் இணைக்கும் கேபிள் திட்டம்!

Default Image
இந்தியாவை மலேசியா, மியான்மர் மற்றும் சிங்கப்பூர் உடன் இணைக்கும் 8,100 கிலோமீட்டர் கேபிள் திட்டம் கையெழுத்திடபட்டுள்ளது.
டிஜிட்டல் வளர்ச்சிக்கு தற்போதைய காலத்தில் ஆசியாவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக மியான்மர், மலேசியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஆப்டிகல் பைபர் கேபிள்களை இணைக்கும் பணியை சிங்கப்பூரை சேர்ந்த ஓரியண்ட் லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக ஜப்பானின் என்இசி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த  NEC Corp மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த Orient Link Pte. Ltd  நிறுவனங்கள் இணைந்து எம்எஸ்டிஎன் கேபிள் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலமாக மியான்மர், மலேசியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது. 8100 கிலோ மீட்டர் பகுதியை இணைக்ககூடிய இந்த பணி 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிறைவடையும் என கூறப்படுகிறது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் என அந்த நிறுவனங்களும் கூறியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்