முட்டைக்கோஸ் சாப்பிட்டால் இவ்வளவு நோய் குணமாகுமா.?

Default Image

தற்போது உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை முட்டைகோஸை பாகற்காயை ஒதுக்குவது போல ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். முட்டைகோஸில் பலவகையான சத்துக்கள் உள்ளது. குறிப்பாக முட்டைக்கோஸில் வைட்டமின் சி வைட்டமின் பி வைட்டமின் பி-6 வைட்டமின் பி-1 போன்ற சத்துக்கள் உள்ளன.

முட்டைக்கோஸ் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது. முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. பச்சையாக உள்ளபோதும் இலைகளில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இது பல நோய்களுக்குத் தீர்வு தருகிறது.

நன்மைகள்:

முட்டைக்கோஸ் சாப்பிடுவார்களுக்கு பக்கவாதம் குறையும் .

உடல் எடையை குறைக்க விரும்புவோர் ஒரு பயனுள்ள உணவாக  இருக்கும்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் முட்டைகோஸ் சாற்றை நான்கு முறை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

முட்டைகோஸில் உள்ள விட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. கண் நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.

முட்டைக்கோஸ் நரம்புகளுக்கு வலுவை கொடுக்கும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்