இந்தியாவின் மிகப்பெரிய போர் விமானம் சீனாவில் சிக்கலான தளத்தில் தரை இறக்கம்!
இந்தியாவின் மிகப்பெரிய போர் விமானம் இந்தியா – சீனா எல்லை அருகே அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிக்கலான தளத்தில், தரை இறக்கப்பட்டது. C17 Globemaster என்ற போர் விமானமானது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள (Tuting) ட்யூட்டிங் விமானப் படை தளத்தில் தரை இறக்கப்பட்டது.
சீனாவின் எல்லைக்கு அருகே உயர்ந்த மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த தளத்தில் சவாலான முறையில் மிகப்பெரிய போர் விமானம் தரை இறக்கப்பட்டுள்ளதாக விமானப் படையின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் செயல் திறனை சோதிக்கும் வகையில் தரை இறக்கப்பட்டதாகவும், 18 டன் எடையை சுமந்து கொண்டு அங்கிருந்து விமானம் பறந்ததாகவும் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.