ஏ. ஆர். ரஹ்மான் பாடலை ஷேர் செய்தால் ரூ. 500.!

ஏ. ஆர். ரஹ்மான் பாடலை பாடிய பாடலை ஷேர் செய்கையில் ஒவ்வோரு ஷேருக்கும் ரூ. 500 வீதம் கொரோனா தடுப்பு நிதியாக பிரதமருக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு எதிராக பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவையும், விழிப்புணர்வு பாடல்களையும், கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் “ஹம் ஹார் நகஹி” என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார்.
அவருடன் அவரது மகளான கதிஜா, ஸ்ருதிஹாசன், சித் ஸ்ரீராம், நீத்தி மோகன், ஜாவேத் அலி, சாஷா திருபாதி, அபய் ஜோத்புர்கர் உள்ளிட்ட பலர் பாடி அசத்தியுள்ளனர். இந்த பாடல் உயிரை பணயம் வைத்து நம்மை கொரனாவிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கும் மருத்துவ பணியாளர்களுக்க்கானபாடலாகும்.
இந்த பாடலை HDFCஎன்ற தனியார் வங்கி ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடலை ஷேர் செய்கையில் ஒவ்வோரு ஷேருக்கும் ரூ. 500 வீதம் கொரோனா தடுப்பு நிதியாக பிரதமருக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஷேர் செய்வது மட்டுமே எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
This song has brought all of us together for a noble cause. Here’s #HumHaarNahiMaanenge, my collaboration with poet & lyricist @prasoonjoshi_ , @HDFC_Bank & many talented musicians. Every time you share this video, HDFC Banks donates to the PM-CARES Fund. https://t.co/xtC1hguOsi
— A.R.Rahman (@arrahman) May 2, 2020
இந்த பாடல் ஒரு நல்ல காரியத்திற்காக அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பாடலை ஷேர் செய்வதோடு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியும் வருகிறது