உக்ரைனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் C-17 ரக விமானங்கள்..!

விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ரக போயிங் விமானங்களையும் மீட்புப் பணிகளில் விமானப் படை ஈடுபடுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் ‘ஆபரேசன் கங்கா’ மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஏர் இந்தியா’ ‘ஸ்பைஸ்ஜெட் ‘ விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ரக போயிங் விமானங்களையும் மீட்புப் பணிகளில் விமானப் படை ஈடுபடுத்தியுள்ளது. இந்த ரக விமானத்தில் சுமார் 300 பேர் வரை பயணம் செய்ய முடியும். அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
சி-17 ரக போயிங் விமானம் 4 என்ஜின் கொண்டது. மணிக்கு 830 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. சுமார் 80,000 கிலோ எடையை சுமந்துசெல்லக்கூடியது. இந்த விமானத்திற்கு ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 4.400 கி.மீ வரை செல்லலாம். இந்தியாவிடம் சி-17 ரக போயிங் விமானங்கள் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025