மைக்ரோசாப்ட் டிக்டாக்கின் உலக செயல்பாடுகளை வாங்க பரிசீலித்து வரும் நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன், பைட்டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கின என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் குழு இந்த சந்தர்ப்பத்தில் டிக்டாக்கில் முதலீடு செய்வது பயனுள்ளது என்பதை பரிசீலித்து வருகிறது. மேலும், தற்போது டிக்டாக்கில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் இழப்பை மதிப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் டிக்டாக் ஜூன் மாத இறுதியில் தடைசெய்யப்படுவதற்கு முன்னர் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுஇருந்தது. இதன் மதிப்பு 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கேட்டபோது, இந்த செய்தி முற்றிலும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிக்டாக் மற்றும் விசாட் போன்றசெயலிகளை தடைசெய்யும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இந்த தடை 45 நாட்களில் நடைமுறைக்கு வருகிறது என்று கடந்த டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்ட தனது இரண்டு தனி நிர்வாக உத்தரவுகளில் தெரிவித்தார். இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 15 வரை அவகாசம் அளித்துள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…