6 சபை வாக்குகள் மட்டுமே.. அதிபராகவுள்ள பைடன்! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #ByeByeTrump
இன்னும் 6 சபை வாக்குகள் பெற்றால் பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், ட்விட்டரில் #ByeByeTrump என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று பின்னடைவில் இருக்கிறார். மேலும், தபால் வாக்குகள் மட்டுமே 10 கோடிக்கு மேல் இருக்கும் காரணத்தினால், அதனை எண்ணுவதற்கு காலதாமதம் ஆகும் என ஏற்கனவே கூறப்பட்டது.
அதிபர் தேர்தலில் முக்கியமான மாகாணங்களான பென்சில்வேனியா, மிச்சிகனில் தபால் வாக்குகளை எண்ணுவதிலும், பைடனுக்கு ஆதரவாக முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி வந்த நிலையில் டிரம்ப், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், விஸ்கான்சின் மாகாணத்தில் மறு வாக்குஎண்ணிக்கை நடத்தக்கோரியும் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளை சந்திக்க பைடனும் தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அதிபர் யார் என அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியானது.
மிச்சிகன் மாகாணத்தில் பைடனை விட டிரம்ப் குறைவிலான வாக்கு வித்தியாசத்தில் இருக்கிறார். மேலும், பென்சில்வேனியாவில் டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். ஆனால், தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கியதும் பைடன் முன்னிலையில் வரத் தொடங்கினார். டிரம்ப் முன்னிலையில் இருந்தாலும், அவர் வெற்றிபெறுவது கடினம் என அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்த அதிபர் பைடன் தான் எனவும், டிரம்ப்க்கு “பாய் பாய்” என அந்நாட்டு மக்கள், #ByeByeTrump என்ற ஹாஷ்டாக் மூலம் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் அந்த ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.