இரவிலும் துள்ளியமாக மனித நடமாட்டத்தை கண்டறியும் கேமரா…!!!! ஹானர் நிறுவனத்தின் அடுத்த வருகை…!!!
- உலகமே கேமரா இல்லாமல் என்பதை பற்றி யாரும் சிந்திக்கக்கூட மனம் வராது, அந்த அளவிற்க்கு மனிதனும் கேமராவும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டது.
- இதன் வரவேற்பின் காரணமாக பல வகைகளில் கேமராக்கள் சந்தைகளில் அறிமுகமாகியுள்ள நிலையில், தற்போது பை புளு கேமராவை அறிமுகமாகிறது.
உலகின் சிறந்த மின்னனு நிறுவனமான ஹானர் தற்போது பை புளு ஸ்மார்ட் கேமராவை அறிமுகம் செய்துள்ளனர்.இந்த கேமராவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். இது 360 டிகிரி கோணத்திலும்,100 டிகிரி செங்குத்து கோணத்திலும் சுழன்று புகைப்படம் எடுக்கும் திறன் வாய்ந்தது. இதனுடன் ஸ்மார்ட் போனையும் இனைத்துக்கொள்ள முடியும்.