கோடையில் குறைந்த செலவில் சுற்றுலா போகலாம் வாங்க
கோடைகாலம் வந்து விட்டாலே நம் மனது மற்றும் உடல் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.கோடையை சமாளிக்க ஒரே வழி குடும்பத்தார் அனைவருடனும் சுற்றுலா செல்வது.
இந்த சுற்றுலாவில் நமது ஒரே நோக்கம் அதிக இடங்களுக்கு சென்று அதிக நேரம் செலவிட வேண்டும் என்பது தான் அந்த வகையில் நாம் பார்ப்பதற்கு சிறந்த சுற்றுலா தளங்கள் குமரி மாவட்டத்திலும் ஏராளமானவைகள் காணப்படுகிறது. கன்னியாகுமரி ஒரே மாவட்டத்தில் குறைந்த செலவிலும் அதிக இடங்களை பார்க்கலாம்.இது பற்றி ஒரு தொகுப்பு.
பகவதி அம்மன் :
கன்னியா குமரியில் பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரிக்கு மிகப்பெரிய பெருமையை சேர்க்கும் இடமாக விளங்குகிறது.சொல்லப்போனால் கன்னியா குமார் என இந்த ஊர் அழைக்க காரணம் இந்த பகவதி அம்மன் கோவில் என்றே சொல்லாம்.
முட்டம் கடற்கரை :
இது நாகர்கோவில் இருந்து16 கி .மீ தொலைவிலும் கன்னியாகுமரியில் இருந்து 32 கி .மீ தொலைவிலும் உள்ளது.
சொத்த விளை கடற்கரை :
இந்து மேற்கு கடற்கரை சாலை வழியாக கன்னியா குமரியில் இருந்து 12கி.மீ தொலைவில் உள்ளது. இதுவுமொரு சிறந்த சுற்றுலா தலமாகும்.
முக்கடல் சங்கமிக்கும் இடம் :
வங்கக்கடல்,அரபிக்கடல் ,இந்துமாக்கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் ஒரு இடமாகும்.
திருவள்ளுவர் சிலை :
திருவள்ளுவரின் 133 அடி சிலை முக்கடலும் சங்கமிக்கும் கடலின் உள்ளே விவேகானந்தர் மண்டபம் அருகே உள்ள பாறையில் அமைந்துள்ளது.
மாத்தூர் தொட்டி பாலம் :
ஆசியாவிலே மிக உயர்ந்த மற்றும் அதிகமான நீளம் கொண்ட பாலமாக இது விளங்குகிறது.இதுவும் பார்ப்பதற்கு மிகவும் சிறந்த சுற்றுல்லா தலமாக விளங்குகிறது.
திற்பரப்பு நீர் வீழ்ச்சி :
திற்பரப்பு அருவியானது நாகர் கோவிலில் இருந்து 42கி .மீ தொலைவிலும் திருவனந்த புரத்தில் இருந்து 55கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திற்பரப்பு எனும் ஊரின் மூலம் இது திற்பரப்பு நீர்வீழ்ச்சி அழைக்கபடுகிறது.
விவேகானந்தர் மண்டபம் :
சுவாமி விவேகானந்தர் பக்தியில் முக்தி அடைந்தது நினைவு கூறும் வகையில் அமைந்தது தான் இந்த் மண்டபம் ஆகும்.இந்த மண்டபம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில கட்டிட கலையை ஒருங்கே கொண்டு கட்ட பட்டவையாகும்.
மேலும் மகாத்மா காந்திமண்டபம், காமராஜ் மண்டபம் முதலிய இடங்களும் அங்கு உள்ளது.குறைவான செலவில் இந்த இடங்களை நாம் சுற்றி பார்க்கலாம்.