பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்.. குறைந்த விலையில் வாங்கலாம் “போக்கோ” ஸ்மார்ட் போன்கள்!

Published by
Surya

போக்கோ நிறுவனத்தின் X2, X3, M2 ப்ரோ, M2 மற்றும் C3 மொபைல்கள் குறைந்த விலையில் பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை, வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் இதில் வீட்டிற்கு தேவையான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும், இதேபோல பொருட்கள் வாங்கவோ அல்லது மேம்படுத்தவோ சிறந்த தருணம் வேறு இல்லை.

இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனை, அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், பிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு அக்டோபர் 15, நண்பகல் முதலே இந்த விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியது.  இந்தநிலையில், இந்த விற்பனையில் போக்கோ நிறுவனத்தின் X2, X3, M2 ப்ரோ, M2 மற்றும் C3 உள்ளிட்ட போன்கள் மலிவான விலையில் கிடைக்கிறது. அதுகுறித்து விரிவாக காணலாம்.

போக்கோ M2:

போக்கோ M2, இது தற்பொழுது ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் மூலம் ரூ.10,499 க்கு வாங்கலாம்.இதில் 6.53 இன்ச் பெரிய டிஸ்பிளே, 113MP + 8MP + 5MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 8MP செல்பி கேமரா, 5000Mah பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ G80 ஆக்டோ-கோர் நானோ மீட்டர் பிராசஸர் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ M2 pro:

அண்மையில் போக்கோ, தனது M2 pro ஸ்மார்ட்போனை வெளியிட்டு, ரூ.16,999க்கு விற்பனை செய்து வந்தது. தற்பொழுது இந்த பண்டிகை கால விற்பனை மூலம் ரூ.12,999 க்கு விற்கவுள்ளது. இதில் 6.67 இன்ச் பெரிய டிஸ்பிளே, 48MP + 8MP + 5MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 16MP செல்பி கேமரா, 5000 Mah பேட்டரி, ஸ்னாப்டிராகன் 720G ஆக்டோ-கோர் 8நானோ மீட்டர் பிராசஸர் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ X2:

போக்கோ X2 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.18,999 ஆகும். இந்த பண்டிகை கால விற்பனை மூலம் ரூ.16,499 க்கு விற்கப்படவுள்ளது. இதில் 6.67 இன்ச் பெரிய டிஸ்பிளே , 664MP + 8MP + 2MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 20+2MP டூயல் செல்பி கேமரா, 4500 Mah பேட்டரி, ஸ்னாப்டிராகன் 730ஜி 8நானோ மீட்டர் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதிகள் உள்ளது.

போக்கோ X3:

சமீபத்தில் வெளியான போக்கோ X3 ஸ்மார்ட்போனின் விலை, ரூ.19,999 ஆக உள்ளது. இந்த பண்டிகைக்கால விற்பனை மூலம் ரூ.16,999 க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன், 6.67 இன்ச் கொண்ட பெரிய டிஸ்பிளே, 64MP + 13MP + 2MP + 2MP என மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள் மற்றும் 20MP செல்பீ கேமரா, 6000 Mah பேட்டரி, ஸ்னாப்டிராகன் 732G 8 நானோமீட்டர் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது.

போக்கோ C3:

போக்கோ C3 ஸ்மார்ட்போன், வரும் ஆக்டோபர் 16-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதில் 6.53 இன்ச் கொண்ட ஒரு பெரிய டிஸ்பிளேயும், 5000 Mah கொண்ட பேட்டரியும், 13 +5 MP ரியர் கேமரா, 5 MP செல்பி கேமரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டா கோர் பிராசஸர் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த விலைக் குறைப்புக்கள், விற்பனையின் போது மட்டுமே இருக்கும். இந்த பண்டிகைக்கால விற்பனை முடிந்தபின், அதன் வழக்கமான விலைக்கு வரும் என்பது குறிப்பிபடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

1 hour ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

3 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

4 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

4 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

5 hours ago