தெலுங்கு திரை உலகில் அல்லு அர்ஜுனின் ‘ButtaBomma’ பாடல் 2 மில்லியன் லைக்குகளை பெற்று யாரும் இதுவரை செய்யாத சாதனையை படைத்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் அல்லு அர்ஜுனை கூறலாம்.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அல் வைகுந்தபுரமுலு படம் தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ், தபு, ஜெயராம், முரளிஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். 100கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் 220 கோடி வரை வசூலை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹரிகா ஹாசின் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அல்லு அரவிந்த் மற்றும் ராதா கிருஷ்ணா தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்திலுள்ள “ButtaBomma” பாடல் ரசிகர்கள் மனதில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று டிரெண்டானது . இந்த நிலையில் தற்போது இந்த பாடல் 2 மில்லியன் லைக்குகளை பெற்று இதுவரை எவரும் செய்யாத பெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் தெலுங்கு திரையுலகில் ஒரு பாடல் 2 மில்லியன் வரை லைக்குகளை பெறுவது இதுவே முதல் முறையாகும். தற்போது அதனை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #TFIFirst2MLikesBUTTABOMMA என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…