பஸ் லாரி மோதல்…உடல் கருகி 26 பேர் பலி…!!
பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான பஸ் தீப்பிடித்ததில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து பன்ஞ்சுகுரை நோக்கி சென்று கொண்டிருந்த போது பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிவிபத்துக்குள்ளானது.
அப்போது சிக்கிய பேருந்து எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது.இந்த கொடூர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 26 பயணிகள் தீயில் உடல் கருகி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து ம்ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாலையில் இந்த விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது