2 மாதங்களுக்கு பின் உகாண் நகரில் பஸ் போக்குவரத்து தொடங்கியது!
உகான் நகரை தலைமை இடமாகக் கொண்ட ஹூபே மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கிறார்கள். உகானில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்குதலால் அங்கு எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக 117 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. அதிலும், ஒவ்வொரு பேருந்திலும் ஒரு சுகாதார பாதுகாப்பு கண்காணிப்பாளர் இருந்துள்ளனர். பேருந்தில் ஏறும் பயணிகளை சோதித்த பின்னே பேருந்தில் ஏற அனுமதியளித்துள்ளனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு, அங்கு சகஜமாக பேருந்துகள் இயங்க துவங்கியுள்ளது.