பெரு நாட்டில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்னமெரிக்க நாடான பெரு நாட்டின் தலைநகராகிய லிமா மற்றும் சென்ட்ரல் அண்டஸ் நகரை இணைக்கும் சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பஸ்சில் 63 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கார்ரிடிரா சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பாங்கான ஒரு பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 650 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது தான் இந்த விபத்துக்கு காரணம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…