திகில் நிறைந்த திட்டம் இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!
ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தை குறித்த தகவல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2011இல் வெளியான அவர்களும் இவர்களும் படத்தின் தமிழில் அறிமுகமானார். அதனையடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.2018ல் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து பல விருதுகளை வென்றார். கடைசியாக விஜய் தேவர கொண்டாவின் வேல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்துள்ளார். தற்போது துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், இது வேதாளம் சொல்லும் கதை உள்ளிட்ட ஆறு படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த படத்தை குறித்த தகவல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்க சதீஷ் என்பவர் இசையமைக்கிறார். இந்த படமும் கனா படம் போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைரலாகி வருகிறது.
What is Plan B? – @MiniStudio_ & @SixerEnt ‘s New Mystery Thriller starring @aishu_dil, titled as #ThittamIrandu (PLAN B)
Happy to Launch #ThittamIranduFirstLook@vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @satish_composer @Thandora_ @proyuvraaj pic.twitter.com/5sGe1rETDt
— VijaySethupathi (@VijaySethuOffl) May 7, 2020