ஷாருக்கானின் பிறந்தநாளுக்காக வண்ணமயமாக ஜொலித்த புர்ஜ் கலிஃபா!
ஷாருக்கானின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக துபாயின் புர்ஜ் கலிஃபாவில் அவரது பெயர் வண்ணமயமாக ஜொலித்ததது.
பாலிவுட் பாட்ஷா’, ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்படங்களில் நடித்துள்ளார். நேற்று இவர் தனது 54வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உலகின் உயரமான கட்டிடம் என்று கூறப்படும் துபாயின் புர்ஜ் கலிபாவில் “ஹேப்பி பர்த்டே ஷாருக்கான்” என்ற எழுதி அவர் நடித்த ஓம் சாந்தி ஓம் பட பாடல் பின்னணியில் இசைத்தவாறு அவரது பெயர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கப்பட்டது .
இதனை பார்க்க திரண்ட ரசிகர்கள் தங்கள் மொபைலில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து கண்டு மகிழ்ந்தனர். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷாருக்கான் என்னை மிகவும் பிரகாசமாக ஜொலிக்க வைத்ததற்கு நன்றி. உங்கள் அன்பும் தயவும் மீற முடியாதது. ஆஹா! இது உண்மையில் நான் இதுவரை கண்டிராத மிக உயரமானதாகும். லவ் யு துபாய். இன்று எனது பிறந்த நாள், நான் உங்கள் விருந்தினராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.