கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம் – 3 வயது குழந்தை மற்றும் பெண் பலி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொல்கத்தாதாவில் கனமழை காரணமாக கட்டிட இடிந்து விழுந்ததில், ஒரு பெண் மற்றும் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் தற்போது தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவிலும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள அஹிரிடோலா எனும் பகுதியில் இன்று காலை பலத்த மழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக இரண்டு மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்த இடிபாடுகளில் சிக்கி 3 வயது குழந்தை மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், அவ்விடத்தில் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த முழு கட்டிடமும் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகளை மிக கவனமுடன் நடத்த வேண்டும். இல்லை என்றால் மீண்டும் ஒரு பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் மீட்கப்பட்டதாகவும், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.