உங்களது நோய் எதிர்ப்பாற்றலை கட்டியெழுப்ப…., கொரோனா என்னும் கொடிய அரக்கன் உங்களை அணுகாம இருக்க…! இதை மட்டும் செய்ங்க மக்களே…!

Default Image

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழ்கண்ட வாழிமுறைகளை பின்பற்றுங்கள். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் எந்தவொரு நோயானாலும் எளிதில் தாக்கும். அந்த வகையில் கொரோனா வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத பட்சத்தில் மிகவும் எளிதாக தொற்றிக் கொள்ளும். எனவே நாம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளை தான் பின்பற்ற வேண்டும். தற்போது இந்த பதிவில், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதத்தில் என்னென்ன வைத்தியம் உள்ளது என்பது பற்றி பார்ப்போம். சூடான நீரைப் பருகுதல் நாம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். மேலும் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து குடிப்பது நல்லது.

food spicyஎளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  நாம் செய்யக் கூடிய உணவுகளில், சீரகம், கொத்தமல்லி, உலர்ந்த இஞ்சி பூண்டு போன்ற மசாலா பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிப்பது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

sleepyநாம் அதிகமாக பகலில் தூங்குவதை விட்டுவிட்டு, இரவு நேரங்களில் கண்டிப்பாக 7-8 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். தூக்கம் குறையும் பட்சத்தில், நமது உடலில் நோய் எதிர்ப்பாற்றலும் குறையும்.

நாம் பாலைக் குடிக்கும்போது அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து குடித்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதாவது அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை 150 மில்லி சூடான பாலில் கலந்து குடிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இவ்வாறு குடிக்க வேண்டும். மூலிகைத் தேநீர் அருந்துவதும் நல்லது. துளசி, இலவங்கப்பட்டை, உலர்ந்த இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட காபி அருந்துவது நல்லது.

வாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வாயை சுற்றி அலசிய பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். மேலும், வெற்று நீரில், புதினா இலைகள் மற்றும் கற்பூரத்தை சேர்த்து, நீராவி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்