தமிழக பட்ஜெட்டை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்று முதல் முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். முதல்வராக பதவியேற்ற பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் இதுவாகும்.
இதனிடையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.