பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி…பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து…!!
மத்திய பட்ஜெட் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி அளித்து இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.