அதிரடியாக சலுகையை அறிவித்து குடியரசு தின பரிசளித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்…

Published by
Kaliraj
  • இந்திய அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய அதிரடி அறிவிப்பு.
  • சலுகையை கூடுதலாக அறிவித்து, குடியரசு தின வாழ்த்து.
பாரத் சஞ்சார்  நிகாம் லிமிடெட் என்னும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71-வது இந்திய குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக  ரூ. 1999 விலை சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதாக  தற்போது அறிவித்துள்ளது.இந்த  புதிய சலுகை இன்று ஜனவரி 26-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பி.எஸ்.என்.எல். ரூ. 1999 விலையில்  365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த புதிய அறிவிப்பின் படி இதன் வேலிடிட்டி 436 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் பலன்களை பொருத்தவரையில்,
  • பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா,
  • அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
  • தினமும் 100 எஸ்.எம்.எஸ்.
  • பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
  • ரிங் பேக் டோனில் பயனர் விரும்பும் பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிகிறது.
இந்த பி.எஸ்.என்.எல்.  ரூ. 1999 சலுகை கடந்த 2018-ம் ஆண்டில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. இதற்க்கு  முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது. பின் கடந்த ஆண்டு 2019ல்  தினசரி டேட்டா அளவில் மாற்றம் செய்யப்பட்டு, தினமும் ஒரு ஜி.பி. டேட்டா கூடுதலாக  3 ஜி.பி. வழங்கப்பட்டு வருகிறது.
Published by
Kaliraj

Recent Posts

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்! 

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

17 minutes ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

46 minutes ago

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…

1 hour ago

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

9 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

13 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

13 hours ago