அதிரடியாக சலுகையை அறிவித்து குடியரசு தின பரிசளித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்…
- இந்திய அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய அதிரடி அறிவிப்பு.
- சலுகையை கூடுதலாக அறிவித்து, குடியரசு தின வாழ்த்து.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71-வது இந்திய குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக ரூ. 1999 விலை சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது.இந்த புதிய சலுகை இன்று ஜனவரி 26-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பி.எஸ்.என்.எல். ரூ. 1999 விலையில் 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த புதிய அறிவிப்பின் படி இதன் வேலிடிட்டி 436 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் பலன்களை பொருத்தவரையில்,
- பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா,
- அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
- தினமும் 100 எஸ்.எம்.எஸ்.
- பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- ரிங் பேக் டோனில் பயனர் விரும்பும் பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிகிறது.
இந்த பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகை கடந்த 2018-ம் ஆண்டில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. இதற்க்கு முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது. பின் கடந்த ஆண்டு 2019ல் தினசரி டேட்டா அளவில் மாற்றம் செய்யப்பட்டு, தினமும் ஒரு ஜி.பி. டேட்டா கூடுதலாக 3 ஜி.பி. வழங்கப்பட்டு வருகிறது.