அடடா..!மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க உதவும் ஹெல்மெட் – விலை எவ்வளவு தெரியுமா?..!

Default Image
மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க உதவும் ஹெல்மெட் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர் உருவாக்கியுள்ளார். 
அமெரிக்காவில் உள்ள கர்னல் நிறுவனத்தை சேர்ந்த பிரையன் ஜான்சன் என்பவர்,சென்சார்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் கூடுகளுடன் கூடிய  ஒரு புதுமையான ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஹெல்மெட் மூலமாக,மூளையின் மின் தூண்டுதல்களையும், மூளையின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும்.
இதனால் மனநல கோளாறுகள்,மூளை செயலிழப்பு,பக்கவாதம் பற்றிய நுண்ணுக்கமான செயல்பாடுகளை அறிய உதவும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலா இரண்டு பவுண்டுகள் எடையுள்ள,இந்த ஹெல்மெட்டின் விலையானது ரூ.37 லட்சம் ($ 50,000) ஆகும்.இதனைத் தொடர்ந்து,அடுத்த சில வாரங்களில் அமெரிக்காவில் இந்த ஹெல்மெட் ஆனது விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்