தினமும் மூன்று முறை பல் துலக்கினால் மாரடைப்பு குறையும்..!
மருத்துவர்கள் தினமும் பல் துலக்க வேண்டும் என பரிந்துரை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்கொரியா விஞ்ஞானிகள் 1.16 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும் இரண்டு அல்லது மூன்று முறைக்கும் மேல் பல் துலக்குபவர்களுக்கு இருதய பிரச்னை ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது என கூறியுள்ளனர்.
ஆய்வில் ,அடிக்கடி பல் விலகுவதால் பற்களுக்கும் , ஈறுகளுக்கும் இடையில் உள்ள பாக்டீரியாக்கள் குறைந்து அவை இரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்கிறது.இந்த ஆய்வில் இரண்டு அல்லது மூன்று முறைக்கும் மேல் பல் துலக்குபவர்களுக்கு இதய செயலிழப்பு 12 சதவீதம் குறைந்தும் ,ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆபத்து 10 சதவீதம் குறைந்தும் காணப்படுகிறது.
ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை அதிகரிப்பதால் உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒழுங்கற்ற துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் செயல் திறன் பலம் குறைகிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.