தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்.!

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். இந்த நிலையில், நடிகர் நாசர் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளிக்கும் போது அவரிடம் நடிகர் மனோ பாலா விஜயை பற்றி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த நாசர் கூறியது ” என்னோட மூத்த பையன் மிக பெரிய விஜய் சார் ரசிகன். அதை என்னால் விரிவாக சொல்லமுடியவில்லை. அவனுக்கு விபத்து ஆகிருச்சு பொழைச்சதே பெரிய விஷயம் எல்லாமே மறந்துட்டான். அப்போது அவனுக்கு ஞாபகம் இருந்த ஒரே விஷயம் விஜய் தான். இந்த தகவல் விஜய் சாருக்கு தெரிய வந்து என் பையன்பிறந்த நாளைக்கு அவரே வந்து கொண்டாடுணாரு” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நாசரின் மனைவி, கமீலா நாசர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்று ட்வீட் செய்துள்ளார்.
தம்பி விஜய் @actorvijay அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் .. https://t.co/LFMBp5yRj0
— Kameela (@nasser_kameela) July 17, 2021