அண்ணன் நலமுடன் இருக்கிறார்- தம்பி கார்த்தி ட்வீட்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது தம்பி மற்றும் நடிகருமான கார்த்தி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா கடந்த 7ஆம் தேதி தனது ட்விட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிராத்தனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது தம்பி நடிகர் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டில் நடிகர் கார்த்தி பதிவிட்டிருப்பது “அண்ணன் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். நாங்கள் அனைவரும் சிறிது நாட்கள் வீட்டிலேயே எங்களை தனிமைபடுத்திக் கொண்டுள்ளோம். பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
Anna is back home and all safe! Will be in home quarantine for a few days. Can’t thank you all enough for the prayers and best wishes!
— Actor Karthi (@Karthi_Offl) February 11, 2021