உடைத்த தேங்காய் 2 மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்க .வேண்டுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்…!
தேங்காய் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
பெண்களை பொறுத்தவரையில், தினமும் சமையலுக்காக கடையில் தேங்காய் வாங்குவது உண்டு. அப்படி தேங்காய் வாங்கும் போது, நாம் சரியான, நல்ல தேங்காயை தான் வாங்குகின்றோமா என்று பார்த்தால், அதில் பலரும் தவறு செய்வதுண்டு.
தற்போது இந்த பதிவில் தேங்காய் எப்படி பார்த்து வாங்க வேண்டும். எது நல்ல தேங்காய்? தேங்காய் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
தேங்காயை வாக்கும் போது, நார்களுக்குள் கருப்பு கொடுக்கல் இருக்கும். இப்படிப்பட்ட தேங்காய் நன்கு முற்றிய தேங்காய் மட்டுமல்லாமல், சுவையாகவும் இருக்கும். தேங்காயை தட்டி பார்க்கும் போது சத்தம் வரக் கூடாது. அப்படி இருந்தால் தான் அது நல்ல தேங்காய். குலுக்கி பார்க்கும் போது கம்மியாக தண்ணீர் இருக்கும் தேங்காயை வாங்க வேண்டும்.
தேங்காயை கீறி எடுத்து, அதனை தண்ணீரில் கழுவி எடுத்து, அதனை ஒரு டப்பாவில் போட்டு மூடி, ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும். இப்படி வைத்தால் தேங்காய் கெட்டு போகாமல், 2 மாதங்களுக்கும் மேலாக அப்படியே இருக்கும்.