“நாட்டுக்காக உடைந்த எலும்பு” ஒரு கையால் பேட்டிங்..!! அசத்திய வீரர்.
இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேச வீரர் தமிம் இக்பால் உடைந்த கையுடன், ஒரு கையால் ‘பேட்டிங்’ செய்ததார்.
துபாய்:
துபாயில் நடந்த முதல் லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி, இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
இப்போட்டியில் முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்த போது, இலங்கையில் லக்மல் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில், தமிம் இக்பாலின் இடது மணிக்கட்டு பகுதியில் பந்து பலமாக தாக்கியது. இதனால மைதானத்தை விட்டு, ‘ரிட்டையர்டு ஹர்டு’ முறையில் மைதானத்தை விட்டு வெளியேறினார் தமிம்.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்சென்றனர். அதில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் இடது ஆள்காட்டி விரலில், லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு தமிம் இக்பால் மீண்டும் மைதானத்துக்கு திரும்பினார்.
இந்நிலையில் வங்கதேச அணி, 229 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்த போது, தமிம் உடைந்த விரலுடன் ‘பேட்டிங்’; செய்ய களமிறங்கினார். ஒருபுறம் இவர் கம்பெனி கொடுக்க, மறுபுறம் பவுண்டரி மழை பொழிந்த முஷ்பிகுர் ரஹீம், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவரின் துணிச்சலான செயலால் வங்கதேச அணிக்கு 32 ரன்கள் கூடுதலாக கிடைத்தது.இவரின் இந்த தூணிச்சல் மிக்க ஆட்டம் அனைவரும் சமூக வலைத்தளத்தில் ட்ரென்ட் ஆக்க வைத்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் தமிம் பங்கேற்மாட்டார். இன்று இவர் தாயகம் திரும்பவுள்ளார். இவருக்கு பதிலாக நஜ்முல் சாந்தோ மாற்று வீரராக ஆப்கானிஸ்தான் போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் நஜ்முல் சாந்தோவும் விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை.
DINASUVADU
நாட்டுக்கான அர்ப்பணிப்புடன் விளையாடும் தமீம்
Sometimes you don't have to sacrifice your life for patriotism.
#Respect #TamimIqbal #AsiaCup2018 pic.twitter.com/uuNDVEzaEV— SHOHEL RANA (@imsr6) September 16, 2018