6 மாதங்களுக்கு பிராட்வே தியேட்டர்கள் மூடல்.!
மேலும் 6 மாதங்களுக்கு பிராட்வே தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதனால் படத்தின் படப்பிடிப்புகள் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் பள்ளிக்கூடங்கள், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் 200 ஆண்டுக்கும் மேற்பட்ட பாரம்பரியத்தை கொண்டவை பிராட்வே தியேட்டர்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முதல் நவீன கால சினிமா வரை பிராட்வே தியேட்டர்களில் அரங்கேற்றம் செய்யப்படும் என்றே கூறலாம், 40க்கும் மேற்பட்ட அரங்குகளை கொண்டது இவற்றில் பல திரையரங்குகலாகவும் உள்ளன.
நியூயார்க் நகர சுற்றுலாவின் ஒரு அங்கமாகவும் பிராட்வே தியேட்டர்கள் விளங்குகிறது, இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் காரணமாக பிராட்வே தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி வரை தியேட்டர்களை மூட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து பிராட்வே தியேட்டர் தலைவர் கூறியது ” லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் ஆயிரக்கணக்கான நாடக கலைஞர்கள் உயிரும் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம் இதை கருத்தில் கொண்டு மீண்டும் திறக்கும் பொழுது பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை நகரத்தின் நிர்வாகிகளுடன் இணைந்து இப்போதே திட்டமிட்டு வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.