பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை…! வருகையின் பின்னணி என்ன….?

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியதை தொடர்ந்து, முதல் சர்வதேச பயணமாக இந்தியா வரவுள்ளார். இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம், குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரிட்டனில் கொரோனா 2-வது அலை மிகவும் தீவிரமாக பரவி வந்ததால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.