இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவு செய்த பிரிட்டன் நிறுவனம்

Default Image
  • மினி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது.
  • எலெக்ட்ரிக் கூப்பர் எஸ்.இ.(All-electric Mini Cooper SE hatchback) ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
மினி நிறுவனம் பிரிட்டனை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்திய சந்தையை குறிவைக்காத எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் கிடையாது.அந்த வகையில்
தான் மினி நிறுவனமும் தற்போது இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது.
மினி நிறுவனத்தின் முழுவதும்  எலெக்ட்ரிக் கூப்பர் எஸ்.இ.(All-electric Mini Cooper SE hatchback) ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடலை இந்தியாவில் 2021 -ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக உள்கட்டமைப்பு வசதிகளே வெளியீட்டு திட்டங்களுக்கு காரணமாக மினி நிறுவனம் தெரிவித்துள்ளது.SEI -3 S  பவர்டிரெயின் காருக்கு 184 hp  பவர், 270 Nm டார்க் இழுவிசையை வழங்கும் திறன் வாய்ந்தது.இதனுடன் 32.6 kWh பேட்டரி வழங்கப்படுகிறது.இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 235 முதல் 270 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். 50 kW சார்ஜ் பாயிண்ட் கொண்டு 0 முதல் 80 %  வரை சார்ஜ் செய்ய 35 நிமிடங்களே ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்