ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய பிரிட்டிஷ் தூதர் .! சீனாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்.!
சீனாவில் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை பிரிட்டிஷ் தூதுவரான ஸ்டீபன் அதிரடியாக இறங்கி காப்பாற்றியுள்ளார் .
சீனாவின் ஜாங்ஷன் நகராட்சி தூதுவராக பணியாற்றி வருபவர் ஸ்டீபன் எலிசன்(61).இவர் ஜாங்கஷன் நகரத்தில் உள்ள சுற்றுலா தளத்தை பார்வையிட்டு கொண்டிருந்தார் . அப்போது அங்கிருந்த ஆற்றில் 24 வயதான பெண் ஒருவர் தடுமாறி விழுந்துள்ளார். தவறி விழுந்த அப்பெண் அலறி கூச்சலிட்ட சிறுது நேரத்தில் சுயநினைவு இழந்து மயக்கமடைந்துள்ளார் .
கூச்சல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த ஸ்டீபன் உடனடியாக தனது காலில் இருந்த ஷூக்களை மாற்றி விட்டு ஆற்றினுள் குதித்து சுயநினைவு இழந்து தத்தளித்த பெண்ணை காப்பாற்றியுள்ளார் . இந்த நெகிழ்ச்சி சம்பவத்தினை சுற்றுலா பயணியில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் . தற்போது அந்த வீடியோ பலரால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.மேலும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த தூதுவரின் நற்செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஸ்டீபன் கூறுகையில், தவறி விழுந்ததால் சுயநினைவு இழந்த அப்பெண்ணிற்கு மூச்சும் விடுவதும் நின்று போனதாகவும் , அவரை ஆற்றிலிருந்து காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்த பின்னர் தான் மூச்சு விட தொடங்கியதாகவும் தெரிவித்தார் . மேலும் தூதுவரின் இந்த நற்செயல் அனைவருக்கும் பெருமையை அளிப்பதாக சீனாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்து ஸ்டீபனுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
We are all immensely proud of our Chongqing Consul General, Stephen Ellison, who dived into a river on Saturday to rescue a drowning student and swim her to safety. pic.twitter.com/OOgXqsK5oe
— UK in China ???????? (@ukinchina) November 16, 2020