பணியாளர்கள்‌‌ 3‌2000 பேரை தற்காலிகமாக இடைநீக்கம்‌ செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்! என்ன காரணம்?

Default Image

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது பணியாளர்கள்‌‌ 3‌2000 பேரை தற்காலிகமாக இடைநீக்கம்‌ செய்துள்ளது. 

கொரோனா வை‌ரஸ்‌  காரனமாக உலகில் உள்ள பல நாடுகள்‌ சர்வதே‌ச விமா‌ன சேவையை ரத்து செய்து உள்ளது .இதன் விளைவாக  பன்னாட்டு‌ விமான நிறுவனங்கள்‌ கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது .நெருக்கடியில் சிக்கிய ஒரு பன்னாட்டு நிறுவனம்தான் பிரிட்டிஷ் ஏர்வேஸ் .இந்த நிறுவனம் தற்காலிகமாக ஊழியர்களை‌ குறைக்கும் நடவடிக்கையில் கடந்த சில தினங்களாக‌ பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் சுமார் 3‌2000 பேரை‌‌ தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது.மேலும் இவர்களுக்கு  அரசின் கொரோனா வைரஸ் திட்டப்‌படி, ‌ஏற்கனவே பெற்று வந்த சம்பளத்தில் 80 %  கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்