நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரசாமே …!!
பிரிட்டன் பிரதமர் நெருக்கடியில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வருகின்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி இரவு 11 மணிக்கு பிரிட்டன் வெளியேறுகிறது. இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தில் வெளியேறுவது முதல் நாட்டின் பல்வேறு நலன்களில் தெரசாமே சமரசம் செய்து கொள்ளவதாக MP_க்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தெரசா ஒப்புதலுக்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை வைத்த போது ஒப்பந்தத்திற்கு MP_க்கள் எதிர்ப்பு தெரிவித்துதனர். இந்நிலையில் நாளை கடைசி முயற்சியாக MP_க்களை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் பிரதமர் தெரசாமே ஈடுபட்டு வருகின்றார் . இந்த முறையும் தெரசா முயற்சி தோல்வி அடைந்தால் தெரசா மே_க்கு எதிராக நம்ம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர போவதாக தொழிலாளர் கட்சி எச்சரித்துள்ளது.இந்த சுழலில் தெரசா மே_க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது