ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க பிரிட்டன் முடிவு! – போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
ரஷ்யா மீது விதிக்கப்ட்டுள்ள பொருளாதார தடைக்கு சம்மதம் தெரிவிப்பதாக பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு.
உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். முன்னதாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார உள்ளிட்ட தடைகளை விதிக்க தயார் என்று ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரிட்டனின் நட்பு நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவெடுத்துள்ளன என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கின்றன. ஏற்கனவே அமெரிக்க, ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்திருந்தது. ரஷ்யாவுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்திருந்தது. பிரிட்டனும் இதுபோன்று தான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது ரஷ்யா மீது விதிக்கப்ட்டுள்ள பொருளாதார தடைக்கு சம்மதம் தெரிவிப்பதாக பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார்.
இதேபோல், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நேட்டோ அமைப்பில் இருக்கக்கூடிய நாடுகள் அனைத்துமே உக்ரைனுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஆனால், தற்போதுவரையில் உக்ரைனுக்கு படைகளை நேரடியாக அனுப்புவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.