பிரிட்டனில் அதிவேகமாக கொரோனா பரவிவரும் நிலையில், ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனக்கா இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
அதன்படி தற்பொழுது பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசியும், அமெரிக்காவில் மார்டனா கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவத் தொடங்கிய நிலையில், அந்நாட்டில் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனக்கா இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்திற்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உருமாறிய கொரோனா வேகமாக பரவும் சூழலில், 2 ஆம் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி இந்த தடுப்பு மருந்து, 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை சேமித்து கொள்ளலாம் எனவும், இதனால் குளிர்சாதன பெட்டியில் எளிதாக எங்குனாலும் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து, இந்தியாவில் “கோவிஷீல்டு” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய அரசும் விரைவில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளது. இதன் விலை ரூ.300 முதல் 500 வரை இருக்கும் எனவும், ஒருவர் 2 டோஸ் போடலாம் எனவும் கூறப்படுகிறது.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…