பெய்ரூட் வெடிவிபத்தின் போது அலறி ஓடும் மணப்பெண் – திருமண வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள்!
பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தின் போது நடைபெற்ற திருமணதில், மணப்பெண் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே வெடி சத்தம் கேட்டு அலறி ஓடும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
வாஷிங்டன் நகரில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கிலிருந்து நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருக்குலைய செய்தது. இந்த வெடி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஹிரோஷிமா நாகசாகி யுடன் ஒப்பிட்டு மிகவும் கண்கலங்கி பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தின் போது திருமணமான ஜோடிகள் அவர்களது திருமண வீடியோக்களை எடுத்து கொண்டு இருந்துள்ளனர். மணப்பெண் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, இந்த விபத்து ஏற்பட்டதால் மணப்பெண் மணமகன் கேமராமேன் அனைவருமே வெடித்ததில் அலறி ஓடும் காட்சிகள் அவர்களது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Bless her heart I think this is a bad Omen for her marriage.????
Bride taking video for her wedding caught in the shock wave of the Beirut Blast
sound on pic.twitter.com/qJzXiwj8Aw
— Mellie (@pinochetbelle) August 6, 2020