ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார்.
பின் தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து கடும் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற போரிஸ் ஜான்சன் கடும் முயற்சியை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நீடித்த நிலையில், பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடந்த பேச்சில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றங்கள் ஒப்புதலுக்கு பிறகு பிரெக்ஸிட் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.