இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் அதனைக் கைப்பற்றினர்.
இதனிடையே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.இதனையடுத்து,கோத்தபய ராஜபக்சே,பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது.
ஆனால்,இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியை இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றடைந்துள்ளார் என சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனிடையே,பிரதமர் தற்காலிகமாக அதிபர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
இலங்கையில்,அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால்,அவசர நிலை பிரகடனம் அமல்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.குறிப்பாக, இலங்கையில்,பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு,ரணில் விக்கிரமசிங்கேவும் உடனே பதவி விலக்கக் கோரி மக்கள் போராட்டம் நடைபெறும் நிலையில்,அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஏப்ரல் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட நிலையில்,கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக தற்போது இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…