#Breaking:கார்கிவ் நகரில் ஏவுகணை தாக்குதல் – உக்ரைனில் ரஷ்யா உக்கிர தாக்குதல்!

உக்ரைன் தலைநகர் கார்கிவ் நகரில் அரசு கட்டடங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,உக்ரைனில் உள்ள தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன.
இதனிடையே,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய படைகள் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,உக்ரைனில் கார்கிவ் நகரில் உள்ள அரசு கட்டடங்களை குறி வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில்,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உடனே வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீவ் பகுதியை ரஷ்ய ராணுவம் கிட்டத்தட்ட முழுமையாக சூழ்ந்து விட்ட நிலையில்,ரயில்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் எப்படியாவது கீவ் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025