#Breaking:பெரும் பதற்றம்…ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு?…!
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது,அவர் மார்பில் சுடப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியது.மேலும்,இது தொடர்பாக, ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK கூறுகையில்:”முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் பொதுமக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது கீழே விழுந்தார்.சம்பவ இடத்தில் இருந்த NHK நிருபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தத்தைக் கேட்டார்.மேலும் அபே மீது இரத்தப்போக்கை அவர் கண்டார்”,என்று தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து,ஷின்சோ அபே மார்பின் மீது குண்டு பாய்ந்து, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுயநினைவை இழந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.இதனால்,ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும்,இதனையடுத்து,ஷின்சோ அபேவை கொல்ல முயன்ற நபரை(வயது 41) கைது காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில்,ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் பின்னர் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.இந்த சம்பவம் ஜப்பான் மக்களிடையே பெரும் பதற்றத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.