#BREAKING : முடிவுக்கு வருமா போர்..? – ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை தொடங்கியது..!

Default Image

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை நாட்டின் கோமல் நகரில் தொடங்கியது.  

நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும், பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலில்,அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதை இன்று ஏற்பதாக தெரிவித்தார். இந்த நிலையில்,  உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை நாட்டின் கோமல் நகரில் தொடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்